லெபனான் பிரதமரை கனடிய வெளியுறவுத்துறை அமைச்சர் சந்திக்கவுள்ளார் .
லெபனான் பிரதமர் Najib Mikati,கனடிய வெளியுறவுத்துறை அமைச்சர் Mélanie Joly ஆ கியோர் சந்திக்க ஏற்பாடாகியுள்ளது.
லெபனான் பிரதமரை New York நகரில் சனிக்கிழமை சந்திக்கவுள்ளதாக Mélanie Joly தெரிவித்தார்.
தெற்கு லெபனானில் இஸ்ரேலுக்கும் போராளிக் குழுவான ஹிஸ்புல்லாவுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல்களுக்கு மத்தியில் இந்த சந்திப்பு ஏற்பாடாகியுள்ளது
இஸ்ரேல் லெபனானுக்கு எதிராக வான்வழித் தாக்குதல்களை முன்னெடுக்கிறது.
இதில் அண்மைய நிகழ்ந்த தாக்குதல்களில் இரண்டு கனடியர்கள் கொல்லப்பட்டதுடன் மேலும் மூவர் காயமடைந்தனர்.
இந்த நிலையில் காசாவில் போர் நிறுத்தத்திற்க Mélanie Joly மீண்டும் அழைப்பு விடுத்தார்
இஸ்ரேலியர்களும் பாலஸ்தீனியர்களும் அமைதியுடனும் பாதுகாப்புடனும் வாழக் கூடிய இரு மாநில தீர்வுக்கான தனது ஆதரவை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்