லெபனானுக்கு எதிரான இஸ்ரேல் வன்முறைகளை நிறுத்துமாறு பிரதமர் Justin Trudeau அழைப்பு விடுத்தார்.
இஸ்ரேல் லெபனானுக்கு எதிராக வான்வழித் தாக்குதல்களை முன்னெடுக்கிறது.
இதில் அண்மைய நிகழ்ந்த தாக்குதல்களில் இரண்டு கனடியர்கள் கொல்லப்பட்டதுடன் மேலும் மூவர் காயமடைந்தனர்.
இந்த வன்முறைக்கு முடிவு காண வேண்டும் என தெரிவித்த பிரதமர், பொதுமக்கள் பாதுகாக்கப்படுவது உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் கூறினார்.
இது ஒரு பயங்கரமான சூழ்நிலை என புதன்கிழமைக்கு 25) கேள்வி நேரத்தின் முன்னர் நாடாளுமன்றத்தில் Justin Trudeau தெரிவித்தார்.
இஸ்ரேல் லெபனானுக்கு எதிராக வான்வழித் தாக்குதல்களை முன்னெடுக்கிறது.
இதில் அண்மைய நிகழ்ந்த தாக்குதல்களில் இரண்டு கனடியர்கள் கொல்லப்பட்டதுடன் மேலும் மூவர் காயமடைந்தனர்.
காசாவில் போர் நிறுத்தத்திற்கான தனது அழைப்பை கனடிய வெளிவிவகார அமைச்சர் Mélanie Joly மீண்டும் வலியுறுத்தினார்.
இஸ்ரேலியர்களும் பாலஸ்தீனியர்களும் அமைதியுடனும் பாதுகாப்புடனும் வாழக் கூடிய இரு மாநில தீர்வுக்கான தனது ஆதரவை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.