கனடியர்கள் இப்போது ஒரு தேர்தலை விரும்புகின்றனர் என்ற எண்ணத்தை ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் முயல்வதாக பிரதமர் Justin Trudeau தெரிவித்தார்.
Justin Trudeau, ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக New York நகரில் உள்ளார்.
அவர் “The Late Show” தொலைக்காட்சி நிகழ்ச்சியில் திங்கட்கிழமை (23) இரவு கலந்து கொண்டார்.
கனடியர்கள் தங்களின் வாழ்க்கைச் செலவு விரக்தியை தன் மீது சுமத்துவதாக கூறிய பிரதமர், அதன் காரணத்தை புரிந்துகொள்வதாகவும் தெரிவித்தார்.
செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம், Liberal கட்சியின் குறைந்து வரும் மக்கள் ஆதரவு குறித்து கேள்வி எழுந்தபோது இந்த கருத்துக்களை தெரிவித்தார்.
Liberal அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்க மாட்டோம் என Bloc Quebecois, NDP கட்சிகள் ஏற்கனவே அறிவித்துள்ளன.