தவறான முறையில் CERB கொடுப்பனவுகளை பெற்றதனால் பணிநீக்கம் செய்யப்பட்ட CRA ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.
CRA ஊழியர்கள் 300 பேர் வரை தவறான முறையில் CERB கொடுப்பனவுகளை பெற்றதனால் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
கனடிய வருமான திணைக்களம் (CRA) இந்த புதிய தரவை வெளியிட்டது.
COVID தொற்று காலத்தில் அவசர கால உதவி தொகையை பெற்றதாகக் கண்டறியப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை குறித்த புதிய தரவை வருமான திணைக்களம் வெளியிட்டது.
June 17 ஆம் திகதி வரை, தகுதியில்லாத 289 பணியாளர்கள் CERB கொடுப்பனவுகளை பெற்றுள்ளனர் என CRA தெரிவித்துள்ளது.
இந்த எண்ணிக்கை March மாதத்தில் அறிவிக்கப்பட்ட 232 ஊழியர்களை விட அதிகமாகும்.
இவர்கள் தொடர்ந்தும் CRA ஆல் பணியமர்த்தப்பட வில்லை என தெரிவிக்கப்படுகிறது.