Liberal அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை செவ்வாய்க்கிழமை (24) சபையில் அறிமுகப்படுத்தப்படும்.
பிரதான எதிர்க்கட்சி இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும்.
அரசாங்கம், பிரதமர் Justin Trudeau மீதான நம்பிக்கையில்லா பிரேரணையாக இது அமையும் என Conservative தலைவர் Pierre Poilievre ஏற்கனவே தெரிவித்துள்ளார்.
இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு புதன்கிழமை (25) நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனாலும் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக ஏனைய எதிர்கட்சிகள் வாக்களிக்காது.
NDP, Bloc Québécois கட்சிகள் இந்த நம்பிக்கையில்லை பிரேரணையில் அரசாங்கத்துக்கு ஆதரவாக வாக்களிக்க முடிவு செய்துள்ளனர்.