தேசியம்
செய்திகள்

British Colombia தேர்தல் பிரச்சாரம் ஆரம்பம்

British Colombia மாகாண தேர்தல் பிரச்சாரம் ஆரம்பமானது.

இந்த இடைத்தேர்தலுக்கான உத்தியோகபூர்வ பிரச்சாரம் சனிக்கிழமை  (21) ஆரம்பமானது.

43வது மாகாண பொதுத் தேர்தலுக்கான அழைப்பை Lieutenant Governor   Janet Austin வெளியிட்டார்.

இந்த தேர்தல் October 19ஆம் திகதி நடைபெறுகிறது.

இந்தத் தேர்தலில் சுகாதார பராமரிப்பு, குற்றம், வீடமைப்பு, பொருளாதாரம் ஆகியன முக்கிய இடம் பிடிக்கின்றன.

இந்தத் தேர்தல் மாகாண முதல்வரும் புதிய ஜனநாயக கட்சியின் தலைவருமான  David Eby, மாகாண  Conservative தலைவர்  John  Rustad  ஆகியோருக்கு இடையில் கடும் போட்டியாக அமையும் என எதிர்வு கூறப்படுகிறது.

பசுமைக் கட்சி  Sonia Furstenau தலைமையில் தேர்தலை எதிர்கொள்கிறது.

Related posts

வரலாறு காணாத உச்சத்தை எட்டும் எரிபொருளின் விலை

Lankathas Pathmanathan

வெளிநாட்டு தலையீட்டை எதிர்க்கும் சட்டமூலம் நிறைவேற்றப்படும்?

Lankathas Pathmanathan

Edmontonனில் வெறுப்பினால் தூண்டப்பட்ட தாக்குதல் குற்றச் சாட்டுக்கள் நான்கு பேர் மீது பதிவு

Lankathas Pathmanathan

Leave a Comment