தேசியம்
செய்திகள்

Ontario வடக்கில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் நால்வர் மரணம்

Ontario வடக்குப் பகுதி வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் நால்வர் உயிரிழந்தனர்.

வியாழக்கிழமை (19) இரவு தீ விபத்து ஏற்பட்ட வீட்டில் நான்கு பேரின் உடல்களை Temiskaming Shores அவசரகால உதவி குழுவினர் கண்டுபிடித்தனர்.

இந்த சம்பவம் குறித்து Ontario மாகாண காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுக்கின்றனர்.

நான்கு பேரின் சடலங்கள் வீட்டில் இருந்து மீட்கப்பட்டதாக வெள்ளிக்கிழமை (20) காலை வெளியான செய்தி குறிப்பில்  OPP   தெரிவித்துள்ளது.

தமது விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளதாக கூறும் OPP, இதனால் பொதுமக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என தெரிவித்தனர்.

Related posts

பணவீக்க விகிதம் கடந்த மாதத்தில் குறைந்துள்ளது

Lankathas Pathmanathan

இலங்கை அரசின் தடை பட்டியலில் 2 கனேடிய தமிழ் அமைப்புகளும் 47 கனேடிய தமிழர்களும்!

Gaya Raja

மூத்த விளையாட்டு ஊடகர் காலமானார்

Lankathas Pathmanathan

Leave a Comment