தேசியம்
செய்திகள்

Justin Trudeau அரசாங்கம் வீழ்ச்சியடைய வேண்டும்: Quebec முதல்வர்

Justin Trudeau அரசாங்கம் வீழ்ச்சியடைய வேண்டும் என Quebec முதல்வர் விருப்பம் தெரிவித்தார்.

Quebec மாகாணத்தின் விருப்பத்தை பிரதமர் தொடர்ந்து அவமதித்து வருவதாக அவர் குற்றம் சாட்டினார்.

இந்த நிலையில் Liberal அரசாங்கத்தை பதவி விலத்தி, தேர்தலை நடத்த உதவுமாறு Quebec முதல்வர் Francois Legault வலியுறுத்தினார்.

Bloc Quebecois கட்சியிடம் வியாழக்கிழமை (19) இந்தக் கோரிக்கையை அவர் முன்வைத்தார்.

ஆனாலும் இந்தக் கோரிக்கையை Bloc Quebecois தலைவர் Yves-Francois Blanchet நிராகரித்தார்.

கடந்த பல மாதங்களாக Justin Trudeauவுக்கு எதிராக Francois Legault கடுமையான விமர்சனங்களை முன்வைக்கிறார்.

மாகாண அதிகார வரம்பு விவகாரங்களில் பிரதமர் தலையிடுவதாக அவர் குற்றம் சாட்டினார்.

சிறுபான்மை Liberal அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு கிடைக்கும் முதல் வாய்ப்பில் ஒரு நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன்னெடுக்க Conservative தலைவர் Pierre Poilievre உறுதியளித்தார்.

இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவு வழங்க வேண்டும் என் எதிர்க்கட்சிகளை Pierre Poilievre கோரினார்.

ஆனாலும் தனது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை தெரிவித்து வாக்களிப்பார்கள் என Bloc Quebecois தலைவர் Yves-François Blanchet கூறினார்.

Related posts

லெபனானில் இருந்து குடிமக்களை வெளியேற்றுவதற்கு தயாராகும் கனடிய அரசு!

Lankathas Pathmanathan

போராட்டங்கள் குறித்த குற்றவியல் விசாரணைகள் பல மாதங்களுக்கு தொடரும்: Ottawa காவல்துறை தலைவர்

Lankathas Pathmanathan

உக்ரைனில் இனப்படுகொலை: கனேடிய நாடாளுமன்றத்தில் பிரேரணை

Lankathas Pathmanathan

Leave a Comment