February 23, 2025
தேசியம்
செய்திகள்

Montreal மசூதிக்குள் கத்தியுடன் நுழைந்த நபர் – தடுக்க முயன்ற மூவர் காயம்

Montreal பகுதியில் உள்ள மசூதியில் மூவர் காயமடைந்த சம்பவம் நிகழ்ந்தது.

மசூதிக்குள் கத்தியுடன் ஒருவர் நுழைந்ததில் மூவர் காயமடைந்தனர்.

வெள்ளிக்கிழமை (20) பிற்பகல் தொழுகையின் போது மசூதியில் கத்தியுடன் ஆயுதம் ஏந்திய ஒருவர் சென்றபோது அவரை தடுக்க முயன்ற மூன்று பேர் காயமடைந்தனர்.

Montreal புறநகர்ப் பகுதியான Châteauguay என்ற இடத்தில இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

காயமடைந்த மூன்று ஆண்களும் 50 வயதுக்கு உட்பட்டவர்கள் எனவும்  அவர்களின் காயங்கள் உயிருக்கு ஆபத்தானவை அல்ல எனவும் தெரியவருகின்றது.

இவர்களில் ஒருவர் தனது காயத்துக்கு சிகிச்சை பெற மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.

இதில் சந்தேக நபரான 24 வயதுடைய ஆண் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

இவருக்கு எதிராக பதிவான குற்றசாட்டுகள் குறித்த விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

இந்த சம்பவம் குறித்து அதிர்ச்சி தெரிவித்த பிரதமர் Justin திருத்தேவூ காயமடைந்தவர்களுக்கு தனது அனுதாபங்களைத் தெரிவித்தார்.

இந்த சம்பவத்தால் “மிகவும் கவலை அடைவதாக” கனடிய முஸ்லிம்களின் தேசிய அவை – National Council of Canadian Muslims (NCCM) கூறியது.

Related posts

சிரியாவில் உள்ள 4 பேரை திருப்பி அனுப்ப உத்தரவிட்ட தீர்ப்பை மேல்முறையீடு செய்யும் கனடா

Lankathas Pathmanathan

ஏழு மாகாணங்களுக்கு வானிலை எச்சரிக்கை

Lankathas Pathmanathan

எதிர்ப்பு முற்றுகை போராட்டங்கள் பாதுகாப்பற்றவை – குழப்பமானவை!

Lankathas Pathmanathan

Leave a Comment