வீடு வீடாகச் சென்று விற்பனை மோசடியில் ஈடுபட்ட இரண்டு சந்தேக நபர்களை Ontario மாகாண காவல்துறையினர் (Ontario Provincial Police – OPP) கைது செய்துள்ளனர்.
இவர்களில் ஒரு தமிழரும் அடங்குகிறார்.
இந்த குற்றச்சாட்டில் மேலும் மூவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
கைதானவர்கள் Mississauga நகரை சேர்ந்த 39 வயதான ரஜீவன் தில்லைந்தராஜா, Scarborough நகரை சேர்ந்த 40 வயதான Sajjad Ahmad என அடையாளம் காணப்பட்டனர்.
காவல்துறையினரால் தேடப்படும் சந்தேக நபர்கள் 23 வயதான Anas Ayyoub, 28 வயதான Muhammad Wasiq Afzal, 33 வயதான Muhammad Waqar Afzal என அடையாளம் காணப்பட்டனர்.
இவர்கள் மூலம் மாகாணம் முழுவதும் 200க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
2021 இல் இந்த மோசடி ஆரம்பித்தாக கூறும் OPP தமது விசாரணைகளின் விபரங்களை வெளியிட்டனர்.
கைதான, தேடப்படும் சந்தேக நபர்களுக்கு எதிரான குற்றச் சாட்டுகள் எதுவும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை.