தேசியம்
செய்திகள்

Ontario மாகாண இடைத் தேர்தலில் PC வெற்றி!

Ontario மாகாண Bay of Quinte தொகுதி மாகாண இடைத் தேர்தலில் Progressive Conservatives கட்சி வெற்றி பெற்றது.

முன்னாள் மாகாணசபை உறுப்பினர் Todd Smith தனது பதவியில் இருந்து விலகிய நிலையில் இந்த இடைத் தேர்தல் நடைபெற்றது.

இந்தத் தேர்தலில் Progressive Conservative கட்சியின் வேட்பாளர் Tyler Allsopp வெற்றி பெற்றார்.

வியாழக்கிழமை (19) நடைபெற்ற இடைத் தேர்தலில்  Liberal கட்சியின் வேட்பாளரை அவர் வெற்றி கொண்டார்.

Tyler Allsopp 39 சதவீதமான வாக்குகளை பெற்றார்.

இந்த இடைத் தேர்தலில் Liberal கட்சியின் வேட்பாளர் Sean Kelly 33 சதவீதமான வாக்குகளையும், NDP வேட்பாளர் Amanda Robertson 23 சதவீதமான வாக்குகளையும் பெற்றனர்.

இந்தத் தேர்தலில் வாக்குப்பதிவு 38 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது.

Related posts

Akwesasne Mohawk சமூகத்திற்கு மத்திய அரசு நிதியுதவி

Lankathas Pathmanathan

மூன்று புதிய Senatorகள் பிரதமரினால் நியமனம்!

Gaya Raja

COVID தடுப்பூசி எல்லைக் கொள்கையை கைவிட கனடா தீர்மானம்

Lankathas Pathmanathan

Leave a Comment