தேசியம்
செய்திகள்

ரஷ்ய எல்லைக்குள் உக்ரைன் NATO ஆயுதங்களை பயன்படுத்தலாம்: Justin Trudeau

ரஷ்ய எல்லைக்குள் உக்ரைன் தாக்குதல் நடத்த அனுமதிக்க வேண்டும் என கனடிய பிரதமர் தெரிவித்தார்.

NATOவின்  நீண்ட தூர ஆயுதங்களை பயன்படுத்தி ரஷ்யாவை தாக்குவதை கனடா முழுமையாக ஆதரிக்கிறது என பிரதமர்  வெள்ளிக்கிழமை (13) தெரிவித்தார்.

மருத்துவமனைகள், குழந்தை பராமரிப்பு மையங்கள் மீது ரஷ்யா மேற்கொள்ளும் தாக்குதல்களை தடுக்க NATO வழங்கிய ஆயுதங்களை உக்ரைன் பயன்படுத்திக்கொள்ள முடியும் எனவும் Justin Trudeau கூறினார்.

உக்ரேனிய குடிமக்களின் உள்கட்டமைப்பை சீரழிக்கும் ரஷ்யாவின் தொடர்ச்சியான தாக்குதலை தடுக்கவும் இது அவசியமானது என அவர் கூறினார்.

ஆனால் NATOவின்  நீண்ட தூர ஆயுதங்களை உக்ரைன் பயன்படுத்துவது கனடாவையும் அதன் நட்பு நாடுகளையும் தம்முடன் நேரடிப் போருக்கு இழுக்கும் என ரஷ்யா அச்சுறுத்துகிறது.

இந்த நிலையில் உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவது அல்லது தொடர்வது ரஷ்ய ஜனாதிபதி Vladimir Putinனின் முடிவு என பிரதமர் Justin Trudeau கூறினார்.

ரஷ்யாவின் படையெடுப்பிற்கு எதிராக போராடுவதில் உக்ரைன் வெற்றி பெற வேண்டும் என்பதில் கனடா உறுதியாக உள்ளது  எனவும்  Justin Trudeau கூறினார்.

Related posts

பிரதமர் Trudeau 10 நாள் சர்வதேச பயணம்

Lankathas Pathmanathan

Ontario Liberal கட்சியின் தலைமை பதவிக்கு ஐந்தாவது வேட்பாளர்

Lankathas Pathmanathan

கத்திக் குத்துச் சம்பவத்தில் மரணமடைந்த தமிழர் அடையாளம் காணப்பட்டார்

Lankathas Pathmanathan

Leave a Comment