தேசியம்
செய்திகள்

தமிழ்ப் பொது வேட்பாளருக்கு கனடிய தமிழர் தேசிய அவை ஆதரவு

இலங்கை  ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு கனடிய தமிழர் தேசிய அவை (NCCT) ஆதரவு தெரிவித்துள்ளது.

இலங்கை  ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளராக பா.அரியநேத்திரன் போட்டியிடுகிறார்.

இவரது தேர்தல் அறிக்கையை வரவேற்றுள்ள கனடிய தமிழர் தேசிய அவை, அதற்கு தனது முழுமையான ஆதரவையும் தெரிவித்துள்ளது.

“தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பு” என்ற ஆற்றலுள்ள அணியாக ஒன்றிணைந்தது ஊடாக தமிழ் மக்களின் கூட்டு அடையாளத்தை வலுப்படுத்துவதற்கு ஒரு புதிய நம்பிக்கையையும் வலுவான அடித்தளத்தையும் ஏற்படுத்தியுள்ளது என கனடிய தமிழர் தேசிய அவை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் இந்தத் தேர்தலைப் பயன்படுத்தி, தமது நிலைப்பாடு குறித்து அனைவருக்கும் ஒரு தெளிவான செய்தியை அறிவிக்க வேண்டும் எனவும் அந்த அறிக்கை கோருகிறது.

இலங்கையின் தமிழர் தாயகப் பகுதிகளில் வாழும் தமிழர், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு வாக்களிப்பதன் மூலம் ஒரு தெளிவான செய்தி வெளியாகிறது என கனடிய தமிழர் தேசிய அவை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

மீண்டும் 300க்கும் அதிகமான தொற்றுக்கள் Ontarioவில்!

Gaya Raja

பிரதமரின் Jamaica விடுமுறை குறித்த நெறிமுறை விசாரணைக்கு Conservative கட்சி அழைப்பு

Lankathas Pathmanathan

Conservative கட்சியின் தலைமைத்துவ வேட்பாளர்களின் விவாதம்

Leave a Comment