December 12, 2024
தேசியம்
செய்திகள்

Freedom Convoy போராட்ட ஏற்பாட்டாளர்களுக்கு எதிரான குற்றவியல் விசாரணை முடிவு

Freedom Convoy போராட்டத்தின் இரண்டு முக்கிய ஏற்பாட்டாளர்களுக்கு எதிரான குற்றவியல் விசாரணை முடிவுக்கு வந்தது.

ஒரு ஆண்டுக்கு மேலாக தொடர்ந்த இந்த குற்றவியல் விசாரணை  வெள்ளிக்கிழமை (13) முடிவடைந்தது.

Tamara Lich, Chris Barber ஆகியோர் “Freedom Convoy” போராட்டத்தின் முக்கிய ஏற்பாட்டாளர்கள் என அடையாளம் காணப்பட்டனர்.

2022 ஆம் ஆண்டு, ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் தலைநகர் Ottawaவில் மூன்று வாரங்களுக்கு மேலாக நடத்திய போராட்டத்தின் ஏற்பாட்டாளர்கள் என இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இவர்களுக்கு எதிராக பல குற்றச்சாட்டுகள் பதிவாகிய நிலையில் குற்றவியல் விசாரணை வெள்ளியன்று முடிவுக்கு வந்துள்ளது.

முதலில் 16 நாட்கள் மட்டுமே நீடிக்கும் என திட்டமிடப்பட்ட, இந்த  குற்றவியல் விசாரணை  45  நாட்களின் பின்னர் முடிவுக்கு வந்தது.

ஆனாலும் இந்த விசாரணையின் தீர்ப்பு வெளியாக குறைந்தது ஆறு மாதங்கள் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

“எனது முடிவை எப்போது வழங்க முடியும் என்று எனக்குத் தெரியாது” என நீதிபதி Heather Perkins-McVey கூறியுள்ளார்.

Related posts

RCMP அதிகாரி Quebec காவல்துறையால் சுட்டுக் கொலை

Lankathas Pathmanathan

Ambassador பாலத்தில் தொடரும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர கோரிக்கை

Lankathas Pathmanathan

கனமழை காரணமாக Trans-Canada நெடுஞ்சாலை மூடப்பட்டது!

Lankathas Pathmanathan

Leave a Comment