தேசியம்
செய்திகள்

கனடிய எல்லையில் அதிக எண்ணிக்கையில் புலம்பெயர்ந்தவர்களை எதிர்கொள்ளும் அமெரிக்க எல்லை காவல்துறை

கனடிய எல்லையில் புலம்பெயர்ந்தவர்களை அதிக எண்ணிக்கையில் எதிர்கொள்வதாக அமெரிக்க எல்லை காவல்துறை தெரிவித்துள்ளது.

October 2023 முதல் இந்த ஆண்டு July வரை கனடா-அமெரிக்க எல்லையில் புலம்பெயர்ந்தவர்களை அதிக எண்ணிக்கையில் எதிர்கொள்வதாக அமெரிக்க சுங்க, எல்லைப் பாதுகாப்பு பிரிவு கூறுகிறது.
அமெரிக்கத் தேர்தலில் சட்டவிரோத குடியேற்றம் குறித்த விவாதம் மேலெழுந்துள்ள நிலையில், பிரதமர் Justin Trudeau அரசாங்கத்திற்கு இது ஒரு சவாலாக மாறலாம் என் நிபுணர்கள் கூறுகின்றனர்.
October 2023 முதல் July 2024 வரையில் கனடிய எல்லையில் 19,498 புலம்பெயர்ந்தோரை எதிர்கொண்டதாக அமெரிக்க எல்லை காவல்துறை கூறுகிறது.
இவர்களில் 15,612 பேர், கனடாவின் Quebec மாகாணத்திற்கும் அமெரிக்காவின் New York,  Vermont மாநிலங்களுக்கு இடையிலான எல்லையில் எதிர்கொள்ளப்பட்டனர் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு முந்தைய ஆண்டு, கனடிய அமெரிக்க எல்லையில் 2,238 புலம்பெயர்ந்தவர்களை மட்டுமே எதிர்கொண்டதாக அமெரிக்க எல்லை காவல்துறை தெரிவித்துள்ளது.
கனடா-அமெரிக்க எல்லையில் அதிக எண்ணிக்கையிலான எதிர்கொள்ளப்படும் புலம்பெயர்ந்தவர்கள் இந்திய வம்சாவளியினர் என தெரியவருகிறது.
October 2023 முதல் July 2024 வரையில் எதிர்கொள்ளப்பட்ட19,498 புலம்பெயர்ந்தவர்களில் 9,742 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள்.
ஒழுங்கமைக்கப்பட்ட நாடு கடத்தல் குழுக்கள் மென்மையான கனடிய எல்லை குடியேற்ற விதிகள் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

Related posts

TTC கட்டண உயர்வு அறிவிப்பு

Lankathas Pathmanathan

கனடாவில் COVID தொற்றின் மொத்த எண்ணிக்கை 12 இலட்சத்தை தாண்டியது!!!

Gaya Raja

பொது சுகாதார நிறுவன தலைமையில் மாற்றம்!

Gaya Raja

Leave a Comment