தேசியம்
செய்திகள்

Liberal அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க முன்வரும் Bloc Québécois?

நம்பிக்கை வாக்கெடுப்பின் போது Liberal அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவது குறித்து சாதகமான கருத்துக்களை Bloc Québécois வெளியிட்டுள்ளது.

Liberal கட்சியுடனான நம்பிக்கை ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதாக NDP கடந்த வாரம் அறிவித்தது.

இந்த நிலையில் சிறுபான்மை Liberal அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவது குறித்து Bloc Québécois நாடாளுமன்ற குழுத் தலைவர் கருத்து தெரிவித்துள்ளார்.

Liberal அரசாங்கத்தை ஆதரிப்பதற்கு ஈடாக Quebec மாகாணத்திற்கு தேவையான ஆதாயங்களைப் பெற தயாராக உள்ளதாக Bloc Québécois கூறுகிறது.

Liberal கட்சி சிறுபான்மை அரசாங்கமாக உள்ள நிலை தமக்கு சாதகமானது என  Bloc Québécois நாடாளுமன்ற குழுத் தலைவர்  Alain Therrien  கூறினார்.

இந்த ஆதரவுக்கு ஈடான கோரிக்கைகளின் பட்டியலை Bloc Québécois தயாரித்துள்ளது.

இவை Quebec மாகாணத்திற்கு தேவையான ஆதாயங்களாக உள்ளதாக Bloc Québécois தெரிவிக்கிறது.

பொதுத் தேர்தலைத் தூண்டும்வகையில் பல நம்பிக்கை வாக்கெடுப்புகளுக்கு Pierre Poilievre தலைமையிலான Conservative கட்சி உறுதியளித்துள்ளது.

இந்த நிலையில் Liberal அரசாங்கத்தை தொடர்ந்தும் ஆட்சியில் வைத்திருக்க தயாராக உள்ளதாக Bloc Québécois தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

Ontario மாகாணத்தை மீண்டும் திறப்பதற்கான மூன்று கட்டத்  திட்டம் வெளியானது!

thesiyam

அவசியமானது: அவசரகாலச் சட்டத்தை நியாயப்படுத்திய பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan

Mississauga நகர முதல்வர் இடைத்தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு ஆரம்பம்

Lankathas Pathmanathan

Leave a Comment