December 12, 2024
தேசியம்
செய்திகள்

Ontario மேன்முறையீட்டு நீதிமன்றம் தமிழ் இனப்படுகொலை கல்வி வாரச் சட்டத்தை உறுதி செய்தது!

தமிழ் இனப்படுகொலை கல்வி வாரத்திற்கான சட்டமூலத்தை Ontario மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்தது.

சட்டமூலம் 104 எனப்படும் தமிழ் இனப்படுகொலை கல்வி வாரத்திற்கான சட்டமூலத்தை மாகாண சபை உறுப்பினர் விஜய் தணிகாசலம் 2019இல் முன்வைத்தார்.

இந்த சட்டமூலம் மாகாண சபையில் 2021இல் நிறைவேற்றப்பட்டது.
இந்த சட்டமூலத்தை எதிர்த்து Ontario மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

Sri Lankan Canadian Action Coalition இந்த வழக்கை தாக்கல் செய்தது.

December 4, 2023 விசாரணைக்கு எடுக்கப்பட்ட வழக்கின் முடிவு வியாழக்கிழமை (05) வெளியானது

தமிழ் இனப்படுகொலை மறுப்பாளர்களால் முன்வைக்கப்பட்ட இந்த அரசியலமைப்பு சவால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டது.

இதன் மூலம், தமிழ் இனப்படுகொலை குறித்து Ontario மாணவர்கள் தொடர்ந்து கல்வி கற்கவும்,  விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அனுமதி வழங்கப்படுகிறது.

இந்த முடிவு குறித்து Scarborough Rouge Park மாகாணசபை உறுப்பினர் விஜய் தணிகாசலம் மகிழ்ச்சி தெரிவித்தார்.

 

 

இந்த சட்ட மூலத்திற்கு எதிரான வழக்கில் உதவ 60க்கும் மேற்பட்ட தமிழ் அமைப்புகள், சமூக உறுப்பினர்கள் முன்வந்ததை அவர் மகிழ்வுடன் நினைவு கூர்ந்தார்.

தமிழ் இனப்படுகொலை கல்வி வாரத்திற்கான சட்டமூலத்தை பாதுகாக்க $100,000க்கும் மேல் நிதி திரட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related posts

புதிய ஆண்டில் COVID தொற்றின் பரவல் அதிகரிக்கக்கூடும்: Dr. Tam

Lankathas Pathmanathan

வைத்தியசாலைகளுக்கு முன்பாக தடுப்பூசி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள்!

Gaya Raja

CBSA வேலை நிறுத்தம் தவிர்க்கப்பட்டது

Lankathas Pathmanathan

Leave a Comment