கனடிய மத்திய வங்கியின் வட்டி விகிதம் 4.25 சதவீதமாக குறைந்தது
கனடிய மத்திய வங்கி மீண்டும் வட்டி விகிதத்தை குறைத்தது.
கனடிய மத்திய வங்கி பரவலாக எதிர்பார்க்கப்பட்ட அதன் புதிய வட்டி விகித குறைப்பை புதன்கிழமை (04) அறிவித்தது.
June மாதத்தின் பின்னர் தொடர்ந்து மூன்றாவது வட்டி விகிதக் குறைப்பை புதன்கிழமை மத்திய வங்கி அறிவித்தது.
பொருளாதாரம் தொடர்ந்து முன்னேற்றம் அடைந்தால், கனடியர்கள் இந்த ஆண்டின் பிற்பகுதியில் மேலும் வட்டி விகிதத்தை குறைப்புகளை எதிர்பார்க்கலாம் என மத்திய வங்கியின் ஆளுநர் Tiff Macklem கூறினார்.
அடுத்த வட்டி விகித அறிவிப்பு October 23 ஆம் திகதி திட்டமிடப்பட்டுள்ளது.