தேசியம்
செய்திகள்

தெருவிழாவில் பங்கேற்காமல் ஒற்றுமையான செய்தியை வெளிப்படுத்துவோம்: கூட்டு அழைப்பு

சமூகத்தின் கவலைகளைப் புறக்கணிப்பதன் மூலம் தேவையற்ற மோதல்கள் ஏற்படும் ஆபத்தான நிலையை கனடியத் தமிழர் பேரவை (CTC) தோற்றுவித்துள்ளது என கனேடியத் தமிழர் கூட்டு கண்டித்துள்ளது.

வெள்ளிக்கிழமை (23) வெளியிட்ட அறிக்கையில் இந்தக் கண்டனத்தை கூட்டு வெளியிட்டுள்ளது.

CTC ஏற்பாடு செய்துள்ள Tamil Fest தெருவிழாவை புறக்கணிக்கும் சமூகத்தின் அழைப்பை அக்கறையுள்ள தமிழ் கனடியர்களின் குரலாக ஆதரிப்பதாக கூட்டு தெரிவித்துள்ளது.

CTC இன் அண்மைய நடவடிக்கைகள், கனடிய தமிழ் சமூகத்தின் நலன்களையும், கவலைகளையும் போதுமான அளவில் பிரதிநிதித்துவப்படுத்த தவறியதன் அதிருப்தியை கூட்டு தனது அறிக்கையில் வெளியிட்டுள்ளது.

“தெருவிழாவில் பங்கேற்காமல் தெளிவானதும் ஒற்றுமையானதுமான ஒரு செய்தியை வெளிப்படுத்துவதே எங்கள் நோக்கமாகும்” என அந்த அறிக்கையில் கூட்டு தெரிவித்துள்ளது.

தெருவிழாவில் ஏற்படக்கூடிய பாதுகாப்பு கவலைகளை Toronto நகரம், Toronto காவல்துறையுடன் கூட்டு முன்கூட்டியே பகிர்ந்து கொண்டுள்ளதாகவும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

 

Related posts

David Johnston பதவி விலகவேண்டும் என நாடாளுமன்றத்தில் பிரேரணை நிறைவேறியது

Lankathas Pathmanathan

புதிய COVID மாறுபாடுகள் குறித்து விமான கழிவு நீரில் சோதனை

Lankathas Pathmanathan

NDP நாடாளுமன்ற குழு சந்திப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment