தேசியம்
செய்திகள்

தொழில் காப்புறுதி பெறுபவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

தொழில் காப்புறுதி(EI) பெறுபவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டில் 10 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.

கனடிய புள்ளி விபரத் திணைக்களம் வெள்ளிக்கிழமை (23) இந்தத் தகவலை வெளியிட்டது.

தொடர்ச்சியாக இரண்டாவது மாதம் தொழில் காப்புறுதி பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக புள்ளி விபரத் திணைக்களம் கூறுகிறது.

முந்தைய மாதத்தை விட தொழில் காப்புறுதி பெறுபவர்களின் எண்ணிக்கை 6,000 பேரால் உயர்ந்துள்ளது.

நாடளாவிய ரீதியில் மொத்தம் 474,000 பேர் EI பெறுவதாக தகவல் தெரிவிக்கிறது.

இது கடந்த ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடுகையில் 10 சதவீதம் அதிகரிப்பாகும்.

நாடளாவிய ரீதியில் 519,000 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் அல்லது வேலையில்லாமல் உள்ளனர் என ஒரு அறிக்கை தெரிவிக்கிறது.

கடந்த ஆண்டு EI பெறும் நபர்களின் எண்ணிக்கையில் Ontario மாகாணம் மிகப்பெரிய அதிகரிப்பைக் கண்டுள்ளது.

June 2023 உடன் ஒப்பிடும்போது, June 2024 இல் Ontarioவில் 30,000 பேர் கூடுதலாக EI பெற்றுள்ளனர்.

இது ஒட்டுமொத்தமாக 25 சதவீதம் உயர்வாகும்.

Newfoundland and Labrador, New Brunswick, Nunavut மாகாணங்களில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் June மாதத்தில் குறைவான EI பயனாளிகள் பதிவாகியுள்ளனர்.

கனடாவில் வேலையற்றோர் விகிதம் கடந்த ஆண்டில் படிப்படியாக அதிகரித்துள்ளது.

வேலையற்றோர் விகிதம் June 2023 இல் 5.4 சதவீதத்தில் இருந்து June 2024 இல் 6.4 சதவீதமாக உயர்ந்துள்ளது.

Related posts

குறைந்த ஊதியம் பெறும் உறுப்பினர்களுக்கு குறிப்பிடத்தக்க ஊதிய உயர்வை வழங்கும் ஒப்பந்தம்!

Lankathas Pathmanathan

இரண்டு நாடாளுமன்ற இடைத் தேர்தல் திகதி அறிவிப்பு

Lankathas Pathmanathan

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பை அதிகரிக்க கோரிக்கை

Leave a Comment