Toronto பெரும்பாக பகுதியைச் சேர்ந்த சந்தேக நபருக்கு எதிராக பயங்கரவாத குற்றச்சாட்டுகளை RCMP பதிவு செய்துள்ளது.
நீண்ட விசாரணையின் பின்னர் இந்தக் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளதாக RCMP கூறுகிறது.
குற்றம் சாட்டப்படும் போது சந்தேக நபரின் வயது காரணமாக, அவர் இளைஞர் குற்றவியல் நீதிச் சட்டத்தின் விதிமுறைகளின் கீழ் பெயரிடப்படவில்லை.
கனடாவில் தடை செய்யப்பட்ட பயங்கரவாதக் குழுவின் நடவடிக்கைகளில் இவர் பங்கேற்றதாக கூறப்படுகிறது.
மற்றொரு நபரை பயங்கரவாதக் குற்றச் செயல்களில் ஈடுபட இவர் ஆலோசனை வழங்கியதாகவும் RCMP தெரிவித்தது.
சந்தேக நபர் எந்த குழுவை ஆதரித்தார் அல்லது அவரது என்ன நடவடிக்கைகள் குற்றச்சாட்டுகளுக்கு வழிவகுத்திருக்கலாம் போன்ற விபரங்கள் வெளியாகவில்லை.
Toronto வை சேர்ந்த தந்தை, மகன், ISIS அமைப்புக்கு ஆதரவாக வன்முறைத் தாக்குதலை நடத்த சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட சில வாரங்களுக்கு பின்னர் இந்த புதிய குற்றச்சாட்டுகள் குறித்த விபரம் வெளியானது.