தேசியம்
செய்திகள்

தமிழர் சமூக மையம் அமைவதற்கான இடத்தின் பரிந்துரையை ஏற்றுள்ள Toronto நகரசபையின் உபகுழு

Torontoவில் தமிழர் சமூக மையம் அமைவதற்கான இடம் குறித்த பரிந்துரையை Toronto நகரசபையின் உபகுழு ஏற்றுள்ளது.

திங்கள்கிழமை (05) Toronto நகரசபை உபகுழு இந்தப் பரிந்துரையை ஏற்றுள்ளதாக தமிழர் சமூக மைய முன்னெடுப்புக் குழு தெரிவித்தது. Toronto நகரசபையின் நில ஆதனப் பகுதியின், Toronto நகரவாக்கச் சபை, 311 Staines வீதியில் அமைந்துள்ள நிலத்தை எதிர்காலத்தில் தமிழ் சமூக மையம் அமைவதற்கான இடமாக Toronto நகரசபைக்குப் பரிந்துரைத்தது.

Toronto நகரவாக்கச் சபை, இந்த பரிந்துரையை நகரசபையின் உபகுழுவிற்கு கடந்த வாரம் சமர்ப்பித்திருந்தது.திங்கள்கிழமை, Toronto நகரசபை உபகுழுவினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்தப் பரிந்துரை, Toronto நகர சபையினால் October 27ம் திகதியும் அங்கீகாரத்துக்காக எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

Related posts

12 முதல் 17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு Moderna தடுப்பூசிகள்: Health கனடா அங்கீகாரம்!

Gaya Raja

தேசியத்தின் ஆசனப் பகிர்வு கணிப்பு

Gaya Raja

July மாத இறுதியில் பாப்பரசர் கனடாவிற்கு விஜயம்

Lankathas Pathmanathan

Leave a Comment

error: Alert: Content is protected !!