December 12, 2024
தேசியம்
செய்திகள்

தமிழரின் மரணத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இருவர் கைது

தமிழர் ஒருவரின் மரணத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகளை இருவர் எதிர்கொள்கின்றனர்.

July மாதம் 6ஆம் திகதி Scarboroughவில் Warden and Ellesmere சந்திப்புக்கு அருகாமையில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த தமிழர் உயிரிழந்தார்

மரணமடைந்தவர் 28 வயதான Pickering நகரை சேர்ந்த சுலக்சன் செல்வசிங்கம் என அடையாளம் காணப்பட்டார்.

இந்தச் சம்பவம் குறித்து இரண்டு இளைஞர்கள் மீது Toronto காவல்துறையினர் முதல் நிலை கொலைக்  குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளனர்.

Tow truck தொடர்பான 11 துப்பாக்கிச் சூடு குற்றங்களுடன் அவர்களை தொடர்புபடுத்தும் விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

அவற்றில் எட்டு குற்றங்கள் கனடா தின நீண்ட வார இறுதியில் நிகழ்ந்துள்ளது.

Oshawa, Stouffville நகரங்களைச் சேர்ந்த 15,16 வயதுடைய இரண்டு ஆண்களை கைது செய்துள்ளதாக புதன்கிழமை (21) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் காவல்துறையினர் தெரிவித்தனர்.

கைதானவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் எதுவும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை.

Related posts

Quebecகில் பலர் மின்சாரத்தை இழந்த நிலை தொடர்கிறது

Lankathas Pathmanathan

கட்டாய தடுப்பூசி கொள்கைகள் : பிரதான இரண்டு கட்சிகளின் வேறுபட்ட நிலைப்பாடுகள்!

Gaya Raja

படுகொலை செய்யப்பட்ட ஆறு இலங்கையர்கள் நினைவாக அமைதி நிகழ்வு

Lankathas Pathmanathan

Leave a Comment