கனடியத் தமிழர் பேரவை (CTC), அதன் அனைத்து நடவடிக்கைகளை நிராகரிக்க கனடியத் தமிழர் தேசிய அவை (NCCT) அழைப்பு விடுத்துள்ளது.
செவ்வாய்க்கிழமை (20) வெளியான இரண்டு பக்க அறிக்கை ஒன்றில் NCCT இந்தக் கோரிக்கையை முன் வைத்துள்ளது.
தமிழ் கனடியர்கள் மத்தியில் CTC, தேவையற்ற ஒரு அமைப்பாக மாற்றமடைந்து விட்டது என அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
இந்தப் பின்னணியில் Tamil Fest உட்பட CTCயின் அனைத்து நடவடிக்கைகளையும் புறக்கணிக்க கனடிய தமிழர்களிடம் NCCT கோரியுள்ளது.
CTCயை முற்றாக நிராகரிக்கவும், Tamil Fest உட்பட அதன் அனைத்து செயல்பாடுகளையும் புறக்கணிக்கவும், அனைத்து மட்ட அரசாங்கங்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து மக்கள் பிரதிநிதிகளை கனடிய தமிழர் சார்பில் கூட்டாக கோருவதாக NCCT தெரிவித்துள்ளது.
கனடியத் தமிழர் தேசிய அவை வெளியிட்ட அறிக்கை: