தேசியம்
செய்திகள்

கல்வி அமைச்சர் Todd Smith பதவி விலகல்

Ontario மாகாண கல்வி அமைச்சர் Todd Smith பதவி விலகினார்.

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதவி விலகுவதாக அவர் தெரிவித்தார்.

தனியார் துறையில் ஒரு பதவியை ஏற்றுக் கொள்வதற்காக அரசியலை விட்டு வெளியேறுவதாக Todd Smith வெள்ளிக்கிழமை (16) வெளியான ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

Bay of Quinte மாகாணசபை உறுப்பினர் Todd Smith, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தனது அமைச்சு பதவியில் இருந்தும், மாகாண சபை உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகுகிறார்.

தனது முடிவை முதல்வர் Doug Ford இடம் அறிவித்துள்ளதாக Todd Smith தெரிவித்தார்

Ontario மாகாண எரிசக்தி அமைச்சராக Todd Smith மூன்று ஆண்டுகள் பணியாற்றினார்.

June மாத அமைச்சரவை மாற்றத்தை தொடர்ந்து அவருக்கு கல்வி அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

இவர் 2011ஆம் ஆண்டு முதல் மாகாண சபை உறுப்பினராக பதவி வகிக்கிறார்.

Ontario மாகாணத்தில் January மாதத்தை தமிழ் மரபுரிமை மாதமாக அறிவிக்கும்  சட்டமூலத்தை Todd Smith அறிமுகப்படுத்தினார்.

Todd Smith இந்த சட்டமூலத்தை ஐந்து முறை மாகாண சபையில் முன்வைத்த நிலையில் அதற்கான அங்கீகாரம் 2014ஆம் ஆண்டு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

Canada Post  நிர்வாகம் – தொழிற்சங்கம் இரண்டு வாரங்களில் முதல் தடவையாக சந்திப்பு

Lankathas Pathmanathan

Ontario Liberal கட்சியின் தலைமை பதவிக்கு ஐந்தாவது வேட்பாளர்

Lankathas Pathmanathan

தெற்கு Ontarioவில் எரிபொருளின் விலை மீண்டும் குறைகிறது

Leave a Comment