தேசியம்
செய்திகள்

தமிழ் இனப்படுகொலை நினைவுத் தூபியை அமைக்கும் திட்டத்தை கைவிடுமாறு Brampton நகர முதல்வருக்கு கனடாவுக்கான இலங்கை துணைத் தூதர் அனுப்பிய இரண்டாவது கடிதம்!

Brampton நகரில் தமிழ் இனப்படுகொலை நினைவுத் தூபியை அமைக்கும் திட்டத்தை கைவிடுமாறு Brampton நகர முதல்வரிடம் வலியுறுத்தி கனடாவுக்கான இலங்கை துணைத் தூதர் இந்த வாரம் மற்றொரு கடிதத்தை எழுதியுள்ளார்.

Brampton நகரில் அமையவிருக்கும்  தமிழ் இனப்படுகொலை நினைவு தூபிக்கான அடிக்கல் புதன்கிழமை (14) நாட்டப்பட்டது.

இந்த முயற்சியை கைவிடுமாறு கோரும் கடிதமொன்றை கனடாவுக்கான இலங்கை துணைத் தூதர் Thushara Rodrigo செவ்வாய்க்கிழமை (13) Brampton நகர முதல்வர் Patrick Brownக்கு அனுப்பியுள்ளார்.

இந்தக் கடிதத்தின் பிரதி ஒன்றை தேசியம் பெற்றுள்ளது.

இலங்கையில் இன நல்லிணக்க  கோரிக்கை நோக்கிய அடிப்படை யதார்த்தங்களை Patrick Brown புறக்கணிப்பதாக இந்தக் கடிதத்தில் இலங்கை துணைத் தூதர் குற்றம் சாட்டியுள்ளார்.

இலங்கையில் இனப்படுகொலை நடைபெற்றது என்பதை மறுப்பதாகவும் அந்தக் கடிதத்தில் Thushara Rodrigo குறிப்பிட்டுள்ளார் .

இந்த நினைவுத் தூபியை அமைப்பதன் மூலம், இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ஒரு சிறிய குழுவினருக்கு Patrick Brown ஆதரவளிப்பதாக கனடாவுக்கான இலங்கை துணைத் தூதர் சுட்டிக் காட்டியுள்ளார்.

Brampton தமிழ் இனப்படுகொலை நினைவுத் தூபியை அமைக்கும் திட்டத்தை கைவிடுமாறு கடந்த May மாதம் எழுதிய கடிதத்தில் Thushara Rodrigo, Brampton நகர முதல்வரிடம் வலியுறுத்தியிருந்தார்.

இலங்கையில் நல்லிணக்கத்தையும் அமைதியையும் ஏற்படுத்த CTC போன்ற தமிழ் அமைப்புகளால் முன்னெடுக்கப்படும் முயற்சிகளை இந்த நினைவுத் தூபி அமைக்கும் முயற்சி தடம்புரளச் செய்யும்  என இந்தக் கடிதத்தில் கனடாவுக்கான இலங்கை துணைத் தூதர் எச்சரித்திருந்தார்.

இந்த வாரம் எழுதியுள்ள கடிதத்தில் Thushara Rodrigo இதே எச்சரிக்கையை முன்வைத்துள்ளார்.

இலங்கை அரசாங்கத்தின் தொடர்ச்சியான வெளிநாட்டு தலையீடுகளுக்கு எதிராக கனடிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் புதன்கிழமை நடைபெற்ற தமிழ் இனப்படுகொலை நினைவு தூபிக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வில் Patrick Brown குறிப்பிட்டிருந்தார்.

இலங்கை அரசின் இந்த முயற்சியை கனடாவில் வெளிநாட்டு தலையீடாக கருத இடம் உள்ளது என கனடிய தமிழர் கூட்டு அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts

September 10ஆம் திகதிக்குள் Conservative கட்சிக்கு புதிய தலைவர்

Lankathas Pathmanathan

சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகினார் Jason Kenney

Lankathas Pathmanathan

கனடாவின் பல பகுதிகளில் குளிர் கால வானிலையின் தாக்கம்

Lankathas Pathmanathan

Leave a Comment