தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE), உலகத் தமிழர் இயக்கம் (WTM) மீதான தடை கனடாவில் நீடிக்கப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் கனடாவில் பயங்கரவாத அமைப்பாக 2006ஆம் ஆண்டு April மாதம் 08ஆம் திகதி அறிவிக்கப்பட்டது.
உலகத் தமிழர் இயக்கம் கனடாவில் பயங்கரவாத அமைப்பாக 2008ஆம் ஆண்டு June மாதம் 13ஆம் திகதி அறிவிக்கப்பட்டது.
தடை விதிக்கப்பட்ட அமைப்புகள் குறித்து ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மறு ஆய்வு மேற்கொள்வது சட்டப்பூர்வமான தேவையாகும்.
சில வருடங்களுக்கு ஒருமுறை மதிப்பாய்வு செய்வது வழக்கமாகும்.
கடந்த June மாதம் 7ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட மதிப்பாய்வு செயல்முறை பின்னர் இந்த இரண்டு அமைப்புகளின் தடையை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கனடாவின் முடிவை இலங்கை அரசாங்கம் வரவேற்றுள்ளது.