பயங்கரவாத சந்தேக நபரின் கனடிய குடியுரிமையை இரத்து செய்யப்படக்கூடிய நிலை தோன்றியுள்ளது.
Torontoவில் பயங்கரவாத தாக்குதலுக்கு சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நபரின் குடியுரிமையை இரத்து செய்வது குறித்து கனடிய அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.
இஸ்லாமிய அரச குழுவுக்கு ஆதரவாக தீவிரமான வன்முறை தாக்குதலை நடத்த திட்டமிட்டதாக 62 வயதான Ahmed Eldidi, 26 வயதான Mostafa Eldidi ஆகியோர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டனர்.
தந்தை, மகனான இவர்கள் இருவரில் Ahmed Eldidi கனடிய பிரஜை என RCMP உறுதிப்படுத்தியது.
2015ஆம் ஆண்டு கனடாவுக்கு வெளியே இவருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் உள்ளதாக தெரியவருகிறது.
இந்த நிலையில் இவரது குடியுரிமை குறித்து ஆராய உள்ளதாக குடிவரவு அமைச்சர் Marc Miller கூறினார்.
இவருக்கு எவ்வாறு கனடிய குடியுரிமை வழங்கப்பட்டது என்பது குறித்து விசாரிக்க துணை அமைச்சரை கோரியுள்ளதாக அமைச்சர் Marc Miller கூறினார்.
ஒருவர் தனது கடந்த காலம் குறித்து தவறான தகவல்களை வழங்கியிருந்தால் அவரது குடியுரிமையை இரத்து செய்யப்படலாம் என கனடிய குடிவரவு அமைச்சின் இணையதளம் குறிப்பிடுகிறது.
இதேவேளை தீவிரவாத குற்றச் செயல்களுடன் தொடர்புடைய நபர்களுக்கு எவ்வாறு கனடாவில் தங்க அனுமதி வழங்கப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரியுள்ளனர்.
இது தொடர்பான விசாரணையின் அவசியத்தை பிரதமர் Justin Trudea வலியுறுத்தியுள்ளார்.