தேசியம்
செய்திகள்

2024 Paris Olympics: இருபத்தி ஐந்தாவது பதக்கத்தை வென்றது கனடா!

2024 Paris Olympics போட்டியில் கனடா இருபத்தி ஐந்தாவது பதக்கத்தை வெற்றி பெற்றது.

சனிக்கிழமை (10) நடைபெற்ற பெண்களுக்கான ஒற்றையர் 200 மீட்டர் படகோட்டும் –  women’s single 200-metre canoe – போட்டியில் கனடா தங்கப் பதக்கம் வென்றது.

இது கனடா வெற்றி பெறும் இருபத்தி ஐந்தாவது பதக்கமாகும்.

இதில் எட்டு தங்கப் பதக்கங்களும் அடங்குகின்றன.

புறக்கணிக்கப்படாத – non-boycotted – Olympic போட்டியில் கனடா வெற்றி பெற்ற அதிக பதக்கம் இதுவாகும்.

28 வயதான Mississauga நகரை சேர்ந்த Katie Vincent சனியன்று இந்தப் பதக்கத்தை வெற்றி பெற்றார்.

Paris Olympics போட்டியில் Katie Vincent  வெற்றி பெறும் இரண்டாவது பதக்கம் இதுவாகும்.

2024 Paris Olympics போட்டியில் கனடா இதுவரை எட்டு தங்கம், ஆறு வெள்ளி, பதினொரு வெண்கலம் என மொத்தம் இருபத்தி ஐந்து பதக்கங்களை வெற்றி பெற்றுள்ளது.

Related posts

NATO இராணுவ செலவின இலக்கை எட்ட கனடாவை இங்கிலாந்து வலியுறுத்தல்

Lankathas Pathmanathan

தமிழ் சமூக மையத்தின் திட்டத்தை முன்னோக்கி நகர்த்துவது குறித்த ஆலோசனை பொறிமுறை ஆரம்பம்!

Lankathas Pathmanathan

வாகன திருட்டு விசாரணையில் மூன்று சந்தேக நபர்கள் கைது

Lankathas Pathmanathan

Leave a Comment