September 19, 2024
தேசியம்
செய்திகள்

பயங்கரவாத சந்தேக நபர்கள் எவ்வாறு கனடாவிற்கு வந்தனர்?

Toronto பயங்கரவாத சந்தேக நபர்கள் எவ்வாறு கனடாவிற்கு வந்தனர் என்பதை மத்திய அரசு ஆய்வு செய்கிறது.

பொது பாதுகாப்பு அமைச்சர் Dominic LeBlanc இந்தத் தகவலை வெளியிட்டார்.

வெளிநாட்டில் உள்ள பயங்கரவாத குழுவுடன் சந்தேகத்திற்கு இடமான தொடர்பு கொண்டதாக குற்றம்  சாட்டப்பட்ட இருவர் எவ்வாறு கனடாவிற்குள் அனுமதிக்கப்பட்டனர் என்பதை மத்திய அரசு அதிகாரிகள்  ஆய்வு செய்து வருவதாக அவர் கூறினார்.

62 வயதான Ahmed Fouad Mostafa Eldidi, அவரது மகன் 26 வயதான Mostafa Eldidi ஆகியோர் கடந்த வாரம் Ontario மாகாணத்தின் Richmond Hill நகரில் கைது செய்யப்பட்டனர்.

இஸ்லாமிய பயங்கரவாதக் குழுக்கள் சார்பாக கொலை செய்ய சதி செய்தல் உட்பட ஒன்பது வெவ்வேறு பயங்கரவாத குற்றச்சாட்டுகளை இவர்கள் எதிர்கொள்கின்றனர்.

RCMP குற்றம் சாட்டிய தந்தை, மகன் இரட்டையர்களின் குடியேற்ற நடவடிக்கையை மத்திய அரசாங்க அதிகாரிகள் மதிப்பாய்வு செய்து வருவதாக அமைச்சர் Dominic LeBlanc கூறினார்.

இந்த நிலையில் இவர்கள் இருவரும் எவ்வாறு கனடாவிற்கு வந்தனர் என்பது குறித்து விசாரணை நடத்த Conservative கட்சி வலியுறுத்தியுள்ளது.

பயங்கரவாதக் குழுக்களுடன் இவர்களின் தொடர்புகளை முன்னரே வெளிப்படுத்தியிருக்க வேண்டும் என அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

இது கனடாவின் மிகப்பெரிய தேசிய பாதுகாப்பு தோல்வி என Conservative கட்சி தெரிவித்தது.

இந்த விடயம் குறித்து ஆராயப்பட வேண்டிய தேவை குறித்து புதிய ஜனநாயக கட்சியும் வலியுறுத்தியுள்ளது.

Related posts

Québec மாகாண வாகன விபத்தில் 5 பேர் பலி

Lankathas Pathmanathan

சூரிய கிரகணத்தை பார்வையிட Niagara Falls பயணிக்கும் ஒரு மில்லியன் பேர்

Lankathas Pathmanathan

British Columbiaவில் முன்னாள் குடியிருப்பு பாடசாலையில் சடலங்கள் கண்டுபிடிப்பு பெரிய சோகத்தின் ஒரு பகுதி: பிரதமர்

Gaya Raja

Leave a Comment