Toronto காவல்துறை அதிகாரி ஒருவர் காயமடைந்த சம்பவம் சனிக்கிழமை (03) பின்னிரவு நிகழ்ந்தது.
ஒருவரை கைது செய்யும் போது காவல்துறை அதிகாரி ஒருவர் சுடப்பட்டதாக Toronto காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காலில் காயமடைந்த அதிகாரி உயிருக்கு ஆபத்தற்ற நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இதில் 30 வயதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.