துணைப் பிரதமர் Chrystia Freeland அரசியலில் இருந்து வெளியேறக்கூடும் என்ற சமீபத்திய ஊடக செய்திகளை Liberal நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நிராகரித்தார்.
இந்த செய்திகளை வெறும் ஊகங்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் James Maloney விபரித்தார்.
துணை பிரதமருக்கு ஆதரவு Liberal நாடாளுமன்ற குழுவின் அனைத்து உறுப்பினர்களிடம் உள்ளது என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி கூற முடியும் என James Maloney தெரிவித்தார்.
துணைப் பிரதமருக்கும் பிரதமர் அலுவலகத்திற்கும் இடையிலான “பதற்றம்” குறித்த ஊடக அறிக்கைகளின் பின்னணியில் அவரது கருத்துக்கள் வெளியாகின.
முன்னாள் கனடிய மத்திய வங்கியின் ஆளுநர் Mark Carneyயை Chrystia Freelandக்கு மாற்றாக பிரதமர் Justin Trudeau கருதுகிறார் எனவும் ஊடக அறிக்கைகள் வெளியாகியிருந்தன.
அரசியலில் ஈடுபடுவது குறித்து Mark Carneyயுடன் பேசி வருவதை Justin Trudeau அண்மையில் உறுதிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.