லெபனானில் உள்ள கனடியர்களை அங்கிருந்து வெளியேறுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
லெபனானில் வசிக்கும் கனடியர்களை அங்கிருந்து வெளியேறுமாறு கனடிய வெளிவிவகார அமைச்சு கோரியுள்ளது.
மேற்கத்திய நாடுகளுடன் இணைந்து கனடிய அரசாங்கம் தமது குடிமக்களுக்கு இந்த கோரிக்கையினை விடுத்துள்ளது.
லெபனானை விட்டு வெளியேற அல்லது அங்கு பயணத்தை தவிர்க்க மேற்கத்திய நாடுகள் பல கோரியுள்ளன.
Israel – Hezbolla இடையே அதிகரித்து வரும் பதட்டங்கள் போராக மாறக்கூடும் என்ற அச்சத்தின் மத்தியில் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகள் பயண எச்சரிக்கை விடுத்துள்ளன.
Lufthansa, Air France, Eurowings போன்ற பல ஐரோப்பிய விமான நிறுவனங்கள் Beirut சர்வதேச விமான நிலையத்திற்கான விமான சேவைகளை இரத்து செய்துள்ளது.
தற்போது லெபனானில் உள்ள கனடியர்களை வெளியேற்றும் நடவடிக்கை எதுவும் நடைபெறவில்லை என கனடிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.
எதிர்காலத்திலும் இதுபோன்ற உதவிகளுக்கு கனடிய அரசாங்கத்தை நம்பி இருக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்படுகிறது.