ஜனாதிபதித் தேர்தலின் விரிவான வாக்கெடுப்பு முடிவுகளை வெளியிட Venezuela அதிகாரிகளுக்கு கனடா அழைப்பு விடுத்துள்ளது.
இரண்டு பிரதான வேட்பாளர்களும் தேர்தலில் வெற்றி பெற்றதாக கூறியுள்ள நிலையில் கனடாவின் இந்த கோரிக்கை வெளியானது.
மக்களின் விருப்பத்திற்கு மதிப்பளித்து அனைத்து வாக்குச் சாவடிகளுக்கும் விரிவான முடிவுகளை வெளியிடுமாறு கனடிய வெளிவிவகார அமைச்சு அழைப்பு விடுத்துள்ளது.
கனடாவின் பிரதான எதிர்க்கட்சியான Conservative கட்சியும் இதே கோரிக்கையை முன்வைத்தது.
ஜனநாயக வாக்கெடுப்பு சுதந்திரமாகவும் நியாயமாகவும் இருந்தால் மட்டுமே கனடா அதை அங்கீகரிக்க வேண்டும் என Conservative தலைவர் Pierre Poilievre கூறினார்
இந்த விடயத்தில் ஒத்த எண்ணம் கொண்ட நாடுகளுடன் கனடா கூட்டு சேர்ந்து செயல்படுவதாக துணைப் பிரதமர் Chrystia Freeland தெரிவித்தார்.