December 12, 2024
தேசியம்
செய்திகள்

Paris Olympics: இரண்டாவது தங்கம் வென்றது கனடா!

2024 Paris Olympics போட்டியில் கனடா இரண்டாவது தங்கப் பதக்கத்தை வென்றது.

கனடாவின் இரண்டாவது தங்கப் பதக்கத்தை Summer McIntosh திங்கட்கிழமை (29) வென்றார்.

பெண்களுக்கான 400 மீட்டர் தனிநபர் நீச்சல் போட்டியில் அவர் தங்கம் வென்றார்.

Torontoவைச் சேர்ந்த 17 வயது இவர் இந்தப் போட்டியில் தங்கம் வென்ற முதல் கனடிய பெண்மணி ஆவார்.

இந்த Olympics போட்டியில் Summer McIntosh வெற்றிபெறும் இரண்டாவது பதக்கம் இதுவாகும்.

இம்முறை கனடாவின் முதலாவது பதக்கத்தை சனிக்கிழமை (27) அவர் வெற்றி பெற்றார்.

பெண்களுக்கான 400 மீட்டர் freestyle நீச்சல் போட்டியில் Summer McIntosh வெள்ளி பதக்கத்தை வெற்றி பெற்றார்.

திங்களன்று கனடா வெற்றி பெற்ற இரண்டாவது தங்கம் இதுவாகும்.

இது Paris Olympics போட்டியில் கனடா வெற்றி பெறும் ஐந்தாவது பதக்கமாகும்.

இதுவரை Paris Olympic போட்டியில் கனடா இரண்டு தங்கம், ஒரு வெள்ளி, இரண்டு வெண்கலம் என மொத்தம் ஐந்து பதக்கங்களை வெற்றி பெற்றது.

Paris Olympic போட்டியில் இம்முறை 32 விளையாட்டுகளில் 337 கனடிய விளையாட்டு போட்டியிடுகின்றனர்.

Related posts

வெளிநாட்டு தலையீடு குறித்த சிறப்பு அறிக்கையாளராக முன்னாள் ஆளுநர் நாயகம் நியமனம்

Lankathas Pathmanathan

மீண்டும் மாகாணசபை உறுப்பினர்களாக பதவி ஏற்ற இரண்டு தமிழர்கள்

Lankathas Pathmanathan

British Colombiaவில் காட்டுத்தீ எச்சரிக்கை காரணமாக 4,300 வீடுகள் வெளியேற்ற உத்தரவு!

Gaya Raja

Leave a Comment