தேசியம்
செய்திகள்

Scarborough துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி – இருவர் காயம்!

Scarborough வணிக வளாகத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச் சண்டையில் இருவர் பலியானதுடன் – மேலும் இருவர் படுகாயமடைந்தனர்.

புதன்கிழமை (24) அதிகாலை 2:30 மணியளவில் இந்த சம்பவம் Ellesmere & Midland சந்திப்புக்கு அருகாமையில் நிகழ்ந்தது.

இந்த சம்பவத்தை Toronto காவல்துறையினர் “துப்பாக்கி சண்டை” என விபரித்தனர்.

இந்த வணிக வளாகத்தில் தமிழர்களின் சில வணிக நிறுவனங்களும் இயங்கி வருகின்றன.

சம்பவ இடத்திலேயே ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், ஒரு பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இரண்டு ஆண்கள் கடும் காயங்களுடன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இதில் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த விபரங்களை காவல்துறையினர் வெளியிடவில்லை.

சம்பவ இடத்தில் துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் குறித்த விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

Related posts

கனடாவில் வியாழக்கிழமை 7,145  தொற்றுக்கள் பதிவு

Lankathas Pathmanathan

CTC ஆலோசனை சபை உறுப்பினர் பதவி விலகல்

Lankathas Pathmanathan

இலக்கிய நோபல் பரிசு பெற்ற Alice Munro காலமானார்

Lankathas Pathmanathan

Leave a Comment