கனடிய மத்திய வங்கி வட்டி விகிதத்தை மீண்டும் குறைத்தது.
தொடர்ந்து இரண்டாவது முறையாக வட்டி விகிதத்தை குறைப்பதாக மத்திய வங்கி அறிவித்தது.
மத்திய வங்கியின் ஆளுநர் Tiff Macklem இந்த அறிவித்தலை வெளியிட்டார்.
இந்த அறிவித்தல் மூலம் மத்திய வங்கியின் வட்டி விகிதம் 4.5 சதவீதமாக குறைந்தது.
இதன் மூலம், June 2023 முதல் காணப்படாத நிலைக்கு வட்டி விகிதம் திரும்புகிறது.
கடந்த மாதம் வட்டி விகிதத்தை 5 சதவீதத்தில் இருந்து 4.75 சதவீதமாக குறைத்தது.
நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கொள்ளப்பட்ட முதலாவது வட்டி விகித குறைப்பு இதுவாகும்.
பணவீக்கம் தொடர்ந்து குறையும் பட்சத்தில் வட்டி விகிதம் மீண்டும் குறையும் சாத்தியக்கூறுகள் உள்ளதாக மத்திய வங்கி, புதன்கிழமை அறிவித்தது.
March 2022 இல் கனடிய மத்திய வங்கி வட்டி விகிதங்களை அதிகரிக்க ஆரம்பித்ததில் இருந்து பணவீக்கம் குறைந்துள்ளது.