தேசியம்
செய்திகள்

Paris Olympic போட்டியில் 300க்கும் மேற்பட்ட கனடிய வீரர்கள் பங்கேற்பு

Paris Olympic போட்டியில் 300க்கும் மேற்பட்ட கனடிய விளையாட்டு வீரர்கள் போட்டியிடுகின்றனர்.

இந்த வாரம் ஆரம்பமாகும் Olympic 2024, பதினைந்து நாட்கள் நடைபெறுகிறது.

வெள்ளிக்கிழமை (26) ஆரம்ப விழாவுடன் அதிகாரப்பூர்வமாக விளையாட்டுகள் ஆரம்பிக்கும்.

ஆனால் சில போட்டிகள் புதன்கிழமை (24) ஆரம்பமாகிறது.

கனடாவின் முதலாவது போட்டி வியாழக்கிழமை (25) ஆரம்பிக்கும்.

இதில் கனடிய மகளிர் கால்பந்து அணி நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.

இம்முறை 32 விளையாட்டுகளில் 300க்கும் மேற்பட்ட கனடிய விளையாட்டு வீரர்கள் போட்டியிடுவார்கள்.

முன்னைய இரண்டு Olympic போட்டிகளை விட இம்முறை Olympic போட்டிக்கு கனடியர்கள் மத்தியில் ஆதரவு அதிகரித்துள்ளது.

கடந்த Olympic போட்டியில் கனடா 24 பதக்கங்கள் வெற்றி பெற்றது.

Related posts

கனடாவில் தேடப்படும் முதல் 25 சந்தேக நபர்களின் பட்டியல்

Lankathas Pathmanathan

NDP வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்கும்: Jagmeet Singh

கனடிய விமான நிலையங்களில் COVID கட்டுப்பாடுகள் இடை நிறுத்தம்

Leave a Comment