அமைச்சர் Marc Miller, Ville-Marie-Le Sud-Ouest-Île-des-Soeurs தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராவார்.
இவரது அலுவலகம் சேதப்படுத்தப்பட்டது குறித்து Montreal காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுக்கின்றனர்.
இது ஒரு குற்றவியல் செயல் என குறிப்பிட்ட அமைச்சர், இதனை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ளார்.
இதனால் தனது அலுவலக ஊழியர்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என Marc Miller கூறினார்.
இந்த சம்பவம் இஸ்ரேல்-ஹமாஸ் மோதலுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என நம்புவதற்கு காரணம் உள்ளதாக Montreal காவல்துறை கூறுகிறது.
கடந்த வாரங்களில் இஸ்ரேல்-ஹமாஸ் மோதலுடன் தொடர்புடைய பல ஆர்ப்பாட்டங்கள் குடிவரவு அமைச்சர் அலுவலக பகுதியில் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.
Marc Miller கடந்த கோடை முதல் குடிவரவு அமைச்சராகவும் 2015 முதல் Ville-Marie-Le Sud-Ouest-Île-des-Soeurs தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ளார்.