தேசியம்
செய்திகள்

Justin Trudeau தலைமையில் சிவில் சேவை ஊழியர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

Justin Trudeau தலைமையின் கீழ் சிவில் சேவை ஊழியர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

ஒன்பது ஆண்டுகால Liberal ஆட்சியின் போது சிவில் சேவை ஊழியர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

Justin Trudeau தலைமையின் கீழ் சிவில் சேவை ஊழியர்கள் எண்ணிக்கை கனடாவின் மக்கள் தொகையை விட இரண்டு மடங்கு வேகமாக வளர்ந்துள்ளது.

நாட்டின் மக்கள் தொகை 15 சதவீதத்திற்கு குறைவாக வளர்ந்திருந்தாலும், சிவில் சேவைகள் ஊழியர்கள் எண்ணிக்கை 43 சதவீதத்திற்கும் அதிகமாக வளர்ச்சியடைந்துள்ளது.

March 31 நிலவரப்படி, மத்திய அரசின் ஊழியர்கள் 367,772 பேர் பதிவாகி உள்ளனர் என மத்திய கருவூல வாரியத்தால் வெளியிடப்பட்ட தரவுகள் கூறுகின்றன.

Stephen Harper தலைமையிலான Conservative கட்சி ஆட்சியில் இருந்த இறுதி முழு நிதியாண்டில், சிவில் சேவைகள் ஊழியர்கள் தொகை 257,034 ஆக இருந்தது.

இது ஒரு வருடத்திற்கு 3.6 சதவீதத்திற்கும் அதிகமான சராசரி வருடாந்திர வளர்ச்சி விகிதம் அல்லது அதே காலகட்டத்தில் சுமார் 1.6 சதவீதமான கனடாவின் சராசரி ஆண்டு மக்கள் தொகை வளர்ச்சியின் இரட்டிப்பாகும்.

2021, 2023 ஆகிய இரண்டு ஆண்டுகளில் சிவில் சேவைகள் ஊழியர்கள் ஆறு சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.

Related posts

குழந்தைகளுக்கான முதலாவது COVID தடுப்பூசி கனடாவில் அங்கீகாரம்

Lankathas Pathmanathan

கனடிய இராணுவ உறுப்பினர் Latviaவில் உயிரிழந்தார்!

Lankathas Pathmanathan

கனடியர்களின் சவால்களை எதிர்கொள்ள பொது அறிவு கொள்கைகளை வலியுறுத்தும் எதிர்கட்சி தலைவர்

Lankathas Pathmanathan

Leave a Comment