Peel பிராந்திய காவல்துறையின் வரலாற்றில் மிகப்பெரிய துப்பாக்கி பறிமுதல் சம்பவத்தில் 200 குற்றச்சாட்டுகள் பதிவாகின.
இந்த விசாரணையில் 71 துப்பாக்கிகளை கைப்பற்றியதாகவும், 10 பேரை கைது செய்துள்ளதாகவும் Peel பிராந்திய காவல்துறையினர் தெரிவித்தனர்.
இது Peel பிராந்திய காவல்துறையின் வரலாற்றில் மிகப்பெரிய சட்டவிரோத துப்பாக்கி பறிமுதல் சம்பவம் என புதன்கிழமை (17) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் Peel பிராந்திய காவல்துறையினர் அறிவித்தனர்.
‘Project Chrome’ எனப்படும் சட்டவிரோதமான சர்வதேச துப்பாக்கிகள், போதைப்பொருள் கடத்தல் தொடர்பான முக்கிய விசாரணையின் ஒரு பகுதியாக இந்த துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
சட்டவிரோதமான முறையில் துப்பாக்கி கடத்தல் தொடர்பான விசாரணை January 2023இல் ஆரம்பமானது.
இதில் September 2023 முதல், அமெரிக்காவில் இருந்து சட்டவிரோத துப்பாக்கிகள் கடத்தும் தனிநபர்கள் குழுவை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
June 2024 இல், Ontario மாகாணம் முழுவதும் பல தேடுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த தேடுதல்கள் அமெரிக்காவின் Detroit, Michiganனிலும் முன்னெடுக்கப்பட்டன
இந்த விசாரணையில் 1 மில்லியன் டொலர் சட்ட விரோத போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஏழு பேர் பிணை விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் Brampton நகரில் உள்ள Ontario நீதிமன்றத்தில் முன்னிலை படுத்தப்பட்டனர்.
- 38 வயதான Brampton நகரை சேர்ந்த Orlando Thomas,
- 53 வயதான Toronto நகரை சேர்ந்த Conrad Mullings,
- 44 வயதான London நகரை சேர்ந்த Hamisi Stanley,
- 45 வயதான Hamilton நகரை சேர்ந்த Kevin Dias,
- 30 வயதான Thornhill நகரை சேர்ந்த Jordan Richards,
- 45 வயதான Toronto நகரை சேர்ந்த Omar Ranger,
- 41 வயதான Leamington நகரை சேர்ந்த Shelldon Stewart.
ஏனைய மூன்று நபர்கள் நிபந்தனைகளின் பேரில் விடுவிக்கப்பட்டனர்.
- 34 வயதான Toronto நகரை சேர்ந்த Adam Kerr,
- 53 வயதான Vaughan நகரை சேர்ந்த Garfield Morrison,
- 59 வயதான Mississauga நகரை சேர்ந்த Michael Bell.
இவர்களுக்கு எதிரான குற்றச் சாட்டுகள் எதுவும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை.