தேசியம்
செய்திகள்

Toronto பெரும்பாகத்தில் வெள்ளப் பெருக்கு

Toronto பெரும்பாகத்தின் பெரும் பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

Toronto பெரும்பாகத்தில் 125 மில்லிமீட்டர் வரை மழை பெய்யக்கூடும் என சுற்றுச்சூழல் கனடா தெரிவித்தது.

Toronto பெரும்பாகத்திற்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஒரு மணி நேரத்திற்கு 40 மில்லிமீட்டர் வரை மழை பெய்யக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை கிட்டத்தட்ட 100 மில்லிமீட்டர் மழை பெய்ததாக சுற்றுச்சூழல் கனடா தெரிவித்துள்ளது.

DVP நெடுஞ்சாலை, Lake Shore Boulevard வீதியின் சில பகுதிகள் செவ்வாய்க்கிழமை (16) மதியம் வெள்ளம் காரணமாக மூடப்பட்டது.

இந்தக் கடும் மழை காரணமாக சுமார் 167,000 வாடிக்கையாளர்கள் மின்சாரத்தை இழந்துள்ளனர் என Hydro One கூறியது.

Toronto பெரும்பாக பகுதியில்வெள்ளத்தில் சிக்கிய 14 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

Related posts

இஸ்ரேலில் நான்காவது கனேடியர் பலி!

Lankathas Pathmanathan

அவசர காலச் சட்டத்தை செயல்படுத்தியதற்கான மத்திய அரசின் முடிவு சரியானது!

Lankathas Pathmanathan

கடுமையான பனிப்புயல்: விமானங்கள் இரத்து. நெடுஞ்சாலைகள் மூடல்.

Lankathas Pathmanathan

Leave a Comment