December 12, 2024
தேசியம்
செய்திகள்

June மாத பணவீக்க விகிதம் குறைந்தது!

June மாதத்தில் பணவீக்க விகிதம் 2.7 சதவீதமாக குறைந்தது.

June மாத பணவீக்க தரவுகளை கனடிய புள்ளிவிபரத் திணைக்களம் செவ்வாய்க்கிழமை (16) காலை வெளியிட்டது.

எரிபொருள் விலையில் ஆண்டுக்கு ஆண்டு ஏற்பட்ட மெதுவான வளர்ச்சியால் இந்த குறைவு பதிவாகியுள்ளது.

May மாதத்தில், பணவீக்கம் 2.9 சதவீதமாக பதிவாகியிருந்தது.

கனடிய மத்திய வங்கி தனது அடுத்த வட்டி விகித முடிவை அடுத்த வாரம் புதன்கிழமை (24) அறிவிக்க முன்னர் வெளியாகும் இறுதி பணவீக்க தரவுகள் இதுவாகும்.

இந்த மாத ஆரம்பத்தில், மத்திய வங்கி அதன் வட்டி விகிதக் குறைப்பை ஆரம்பித்தது.

மத்திய வங்கி வட்டி விகிதத்தை கால் புள்ளியாக குறைத்து 4.75 சதவீதமாக்கியது.

இந்த நிலையில் அடுத்த வாரம் மத்திய வங்கி மற்றொரு வட்டி விகிதக் குறைப்பை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

Ontario மாகாண சபை தேர்தலில் ஐந்து தமிழ் வேட்பாளர்கள்

Lankathas Pathmanathan

Rexdale துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் பலி – நால்வர் காயம்

Lankathas Pathmanathan

உக்ரேனியர்களுக்கான அவசர பயணத் திட்டத்தை நீட்டிக்கும் கனடா

Lankathas Pathmanathan

Leave a Comment