மறைந்த இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் நினைவேந்தல் நிகழ்வு Scarboroughவில் நடைபெற்றது.
திருகோணமலையின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தனது 91ஆவது வயதில் உடல்நலக் குறை காரணமாக June 30ஆம் திகதி மரணமடைந்தார்.
இவரது நினைவை குறிக்கும் நினைவேந்தல் அஞ்சலி நிகழ்வு கடந்த சனிக்கிழமை (13) Scarborough நகரில் நடைபெற்றது.
கனடா தமிழ் தேசிய கூட்டமைப்பு, கனடிய தமிழர் பேரவையுடன் இணைந்து இந்த அஞ்சலி நிகழ்வை நடத்தியது.
இந்த நிகழ்வில் கனடா தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகள், கனடிய தமிழர் பேரவையின் பிரதிநிதிகள் உள்ளிட்ட சிலர் உரையாற்றினர்.
முன்னர் நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் இரா.சம்பந்தன் புகைப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினர்.
இந்த நிகழ்வில் சுமார் 50 பேர் வரை கலந்து கொண்டனர்.
நிகழ்வின் புகைப்படங்கள்: இணையத்தில் பெறப்பட்டவை