மாகாண ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட கடைகளை வெள்ளிக்கிழமை (19) மீண்டும் திறக்கும் திட்டத்தை LCBO மாற்றியுள்ளது
வேலை நிறுத்தம் தொடர்வதால் 32 கடைகளை வெள்ளியன்று திறக்கும் திட்டத்தை LCBO மாற்றியுள்ளது.
மதுபான சில்லறை விற்பனையாளரான LCBO, 32 கடைகளை July 19 திறக்க இருப்பதாக முன்னர் அறிவித்தது.
இரு தரப்பினருக்கும் இடையில் ஒரு ஒப்பந்தம் எட்டப்படாவிட்டாலும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் வரையறுக்கப்பட்ட நேரத்திற்கு சில கடைகளை திறக்க முன்னர் உத்தேசிக்கப்பட்டது.
ஆனாலும் இந்த முடிவில் ஒரு செயல்பாட்டு மாற்றத்தை மேற்கொண்டுள்ளதாக LCBO ஞாயிற்றுக்கிழமை (14) அறிவித்தது .
July 5ஆம் திகதி முதல் 9,000க்கும் மேற்பட்ட LCBO ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் காரணமாக மாகாண ரீதியில் 669 LCBO கடைகள் மூடப்பட்டுள்ளன.