தேசியம்
செய்திகள்

Donald Trump மீதான துப்பாக்கிச் சூட்டுக்கு கனடிய பிரதமர் கண்டனம்!

ஜனநாயகம் நிலைநாட்டப்பட வேண்டும் என கனடியத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி Donald Trump மீதான துப்பாக்கிச் சூட்டை கனடிய பிரதமர் கண்டித்தார்.

குடியரசுக் கட்சியின் பேரணியில் சனிக்கிழமை (13) துப்பாக்கிச் சூடு நிகழ்ந்தது.

இதனை தொடர்ந்து வெளியான அறிக்கையில் அரசியல் வன்முறைகளை கண்டிப்பதாக கனடிய பிரதமர் Justin Trudeau கூறினார்.

அரசியல் வன்முறையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என Justin Trudeau தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி Donald Trump மீதான கொலை முயற்சியை வன்மையாக கண்டிப்பதாக Conservative கட்சித் தலைவர் Pierre Poilievre கூறினார்.

எந்த அரசியல் நிகழ்விலும் வன்முறைக்கு இடமில்லை என NDP தலைவர் Jagmeet Singh தெரிவித்தார்.

ஜனநாயகம் பொது நலனுக்கான மிகவும் சக்திவாய்ந்த கருவி என Bloc Québécois தலைவர் Yves-François Blanchet பதிவிட்டுள்ளார்.

இந்த வகையான வன்முறைக்கு ஒருபோதும் மன்னிப்பு இல்லை என ஐக்கிய நாடுகள் சபைக்கான கனடா தூதர் Bob Rae கூறினார்.

இது போன்ற சம்பவங்கள் அனைவராலும் கடுமையாக கண்டிக்கப்பட வேண்டும் என New Yorkகில் உள்ள கனடாவின் தூதர் Tom Clark குறிப்பிட்டார்.

இந்தத் துப்பாக்கி சூடு, ஜனாதிபதி வேட்பாளர் Donald Trumpபை குறிவைக்கும் ஒரு படுகொலை முயற்சியாக நோக்கப்படுகிறது

இந்தத் துப்பாக்கி சூட்டில் தான் காயமடைந்ததாக Donald Trump தெரிவித்தார்.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர் இறந்துவிட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

இந்தப் பேரணியில் கலந்து கொண்ட ஒருவர் கொல்லப்பட்டார் – மேலும் ஒருவர் படுகாயமடைந்தார்.

Related posts

Ottawa போராட்டம் சட்ட விரோதமாகி வருகிறது: பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan

Richmond Hill இந்து ஆலய தமிழ் மரபுத் திங்கள் கொண்டாட்டத்தில் பிரதமர்

Lankathas Pathmanathan

சுயநினைவு இழந்து வாகனத்தை குழந்தை பராமரிப்பு மையத்தில் மோதிய MPP!

Lankathas Pathmanathan

Leave a Comment