NATO இலக்கை அடைவதற்கான திட்டத்தை கனடா அறிவிக்க உள்ளதாக தெரியவருகிறது.
NATO உச்சி மாநாடு Washington நகரில் நடைபெறும் நிலையில் இந்த அறிவித்தல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த உச்சி மாநாட்டில் பிரதமர் Justin Trudeau பங்கேற்கிறார்
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) இரண்டு சதவீதத்தை பாதுகாப்புக்காக செலவழிக்கும் NATO எதிர்பார்ப்பை எட்டாதது குறித்த கனடிய அரசாங்கம் விமர்சனங்களை எதிர்கொள்கிறது.
இந்த நிலையில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டு சதவீதத்தை பாதுகாப்புக்காக செலவழிக்கும் முடிவை கனடா வியாழக்கிழமை (11) அறிவிக்கவுள்ளது.
பல மாதங்கள் இந்த விடயத்தில் அழுத்தத்தை எதிர்கொண்ட பின்னர் Justin Trudeau அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளதாக மூத்த அரசாங்க அதிகாரி தெரிவித்தார்.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டு சதவீதத்தை பாதுகாப்புக்காக செலவிடும் திட்டத்தை கனடா வியாழக்கிழமை வெளியிடும் என மூத்த அரசாங்க அதிகாரி தெரிவித்தார்.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டு சதவீதம் என்ற இலக்கை அடைய பொது காலக்கெடு இல்லாத நாடாக கனடா மட்டும் NATOவில் அங்கம் வகிக்கிறது.
கனடா தற்போது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.37 சதவீதத்தை பாதுகாப்புக்காக செலவிடுகிறது.
இது 32 நாடுகள் பட்டியலில் கனடாவை 27 ஆவது இடத்திற்கு தள்ளியுள்ளது.
2030 ஆம் ஆண்டுக்குள், கனடா மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.76 சதவீதத்தை இராணுவத்திற்காக செலவிடும் என தேசிய பாதுகாப்புத் துறை ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.