தேசியம்
செய்திகள்

வலுவான நகர முதல்வர் அதிகாரங்களை பயன்படுத்தும் Carolyn Parrish

Mississauga நகரின் தலைமை நிர்வாக அதிகாரி பதவி விலக்கப்பட்டார்.

Mississauga நகரின் நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து Shari Lichterman விலக்கப்பட்டார்.

இடைத் தேர்தலில் வெற்றியடைந்த பின்னர், June மாதம் 24ஆம் திகதி Mississauga நகரின் புதிய முதல்வராக Carolyn Parrish பதவி ஏற்றார்.

பதவியேற்ற மறுதினம் நகரின் தலைமை நிர்வாக அதிகாரியை அவர் பதவி விலக்கியுள்ளார்.

வலுவான நகர முதல்வர் அதிகாரங்களை பயன்படுத்தி Carolyn Parrish இந்த நகர்வை மேற்கொண்டார்.

பதவியேற்ற முதல் வாரத்தில் வலுவான நகர முதல்வர் அதிகாரங்களை நகர முதல்வர் ஆறு தடவைக்கு மேல் உபயோகித்துள்ளார்.

தேர்தல் பிரச்சாரத்தின் போது, வலுவான நகர முதல்வர் அதிகாரங்களை பயன்படுத்தப் போவதில்லை என Carolyn Parrish உறுதியளித்திருந்தார்.

மாகாண ரீதியாக வழங்கப்பட்ட வலுவான நகர முதல்வர் அதிகாரங்களை Carolyn Parrish பயன்படுத்தியதை நகர இணையதளம் உறுதிப்படுத்துகிறது.

இந்த ஆண்டின் இறுதி வரை இடைக்கால நகர நிர்வாக அதிகாரியாக Geoff Wright நியமிக்கப்பட்டுள்ளார்.

Related posts

கனேடிய நாடாளுமன்றத்தின் இனப்படுகொலை தொடர்பான பிரேரணையை நிராகரிக்கும் இலங்கை

தேர்தல் குறித்த கேள்விகளுக்கு பதிலளிப்பதை தவிர்த்த பிரதமர்!

Gaya Raja

பாலியல் வன்கொடுமை குற்றத்தை முன்னாள் Parti Québécois தலைவர் ஒப்புக் கொண்டார்

Leave a Comment