தேசியம்
செய்திகள்

இரண்டு வாரங்களுக்கு LCBO கடைகள் மூடப்படும்?

LCBO ஊழியர்கள் வேலை மறுப்பு போராட்டம் வெள்ளிக்கிழமை (05) ஆரம்பிக்கும் சாத்தியக்கூறுகள் அதிகரிக்கின்றன.

சாத்தியமான இந்த வேலை நிறுத்தம் அடுத்த இரண்டு வாரங்களுக்கு அனைத்து LCBO கடைகளையும் மூடும் நிலையை தோற்றுவிக்கும்.

Ontario பொதுச் சேவை ஊழியர் சங்கம் (OPSEU) பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 10,000 LCBO ஊழியர்கள் வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12:01 மணி முதல் சட்டப்பூர்வ வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவார்கள்.

ஊழியர்கள் வேலை மறுப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டால், அனைத்து LCBO விற்பனை நிலையங்கள் 14 நாட்களுக்கு மூடப்படும் என LCBO தெரிவித்துள்ளது.

ஒரு ஒப்பந்தம் எட்டப்படவில்லை என்றால், 30 LCBO கடைகள் மாகாணம் முழுவதும் July 19 முதல் திறக்கப்படும் என LCBO கூறியது.

ஆனால் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் வரையறுக்கப்பட்ட நேரங்களில் இந்த LCBO கடைகள் செயல்படும் என கூறப்படுகிறது.

Related posts

RCMP அதிகாரியை கத்தியால் குத்திய சந்தேக நபர் மீது முதல் நிலை கொலை குற்றச்சாட்டு

Lankathas Pathmanathan

Astra Zeneca தடுப்பூசிக்கான மதிப்பாய்வு இறுதி கட்டங்களில் உள்ளது: Health கனடா

Lankathas Pathmanathan

இலையுதிர் கால காலநிலை எதிர்வு கூறல்

Lankathas Pathmanathan

Leave a Comment