அடுத்த பொதுத் தேர்தலில் பிரதமர் Justin Trudeau தனது கட்சியை வழிநடத்துவார் என பெரும்பான்மையான கனடியர்கள் நம்புகின்றனர்.
ஒரு புதிய கருத்துக்கணிப்பில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
Conservative கட்சிக்கான ஆதரவு Liberal கட்சியை விட அதிகரித்து வரும் நிலையில் Justin Trudeauவின் எதிர்காலம் குறித்த கேள்விகள் ஒரு வருடத்திற்கும் மேலாக எழுந்துள்ளன.
கடந்த வாரம் Toronto – St. Paul தொகுதி இடைத் தேர்தலில் Liberal கட்சி தோல்வியை எதிர்கொண்ட நிலையில் இந்தக் கேள்விகள் தீவிரமடைகின்றன.
June மாத இறுதியில் இணையத்தில் நடத்தப்பட்ட Leger கருத்துக் கணிப்பில் பதிலளித்தவர்களில் மூன்றில் இரண்டு பேர் அடுத்த தேர்தல் வரை Justin Trudeau கட்சித் தலைவராக இருப்பார் என நம்புகிறார்கள்.
அதேவேளை இந்த ஆண்டு இறுதிக்குள் Justin Trudeau பதவி விலகுவார் என தாங்கள் கருதுவதாக கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்களில் மூவரில் ஒருவர் கூறினர்.
September மாத ஆரம்பத்திற்கு முன்னர் பிரதமர் பதவி விலகுவார் என அவர்கள் எதிர்வு கூறினர்.
இந்தக் கருத்துக் கணிப்பில் பிரதமர் மீது பரவலாக அதிருப்தி வெளியாகியுள்ளது.
பிரதமராக அவரது பணிக்கு நான்கில் ஒருவர் மட்டுமே ஒப்புதல் அளித்துள்ளனர்.
மாறாக மூவரில் இருவர் அவரது பணியை ஏற்கவில்லை என கூறினர்.
Prairies மாகாணங்களில் பிரதமருக்கு ஆதரவு மிகக் குறைவாக உள்ளது.
அதே நேரத்தில் பிரதமருக்கு ஆதரவு Quebec மாகாணத்தில் அதிகமாக உள்ளது.
இந்த நிலையில் தனது கவனம் நாட்டை ஆட்சி செய்வதில் உள்ளது என பிரதமர் Justin Trudeau புதன்கிழமை கூறினார்.
அடுத்த தேர்தலில் Liberal கட்சிக்கு தலைமையேற்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.